sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தங்க நகை கொடுத்து முதலீடு செய்தால் லாபத்தொகை வழங்குவதாக கூறி மோசடி

/

தங்க நகை கொடுத்து முதலீடு செய்தால் லாபத்தொகை வழங்குவதாக கூறி மோசடி

தங்க நகை கொடுத்து முதலீடு செய்தால் லாபத்தொகை வழங்குவதாக கூறி மோசடி

தங்க நகை கொடுத்து முதலீடு செய்தால் லாபத்தொகை வழங்குவதாக கூறி மோசடி


ADDED : பிப் 12, 2024 11:12 AM

Google News

ADDED : பிப் 12, 2024 11:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் பிரபல தனியார் நிதிநிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில், இப்ராஹிம் சாருக் என்பவர் பணியாற்றி வருவதாக கூறி, அப்பகுதி பெண்களிடம் நம்ப வைத்துள்ளார். பின், அவர்களிடம், தங்கம் கொடுத்து முதலீடு செய்தால் மாதந்தோறும் லாபத்தொகை, தங்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அதை நம்பிய பெண்கள், கடந்த ஓராண்டுக்கு முன் இந்த திட்டத்தில், 1,000 பவுன் தங்க நகை கொடுத்து முதலீடு செய்துள்ளனர். பின், ஓராண்டுக்கு மேலாக லாபத்தொகை பெற்று வந்துள்ளனர். சில மாதங்களாக முதலீடு செய்தவர்களுக்கு, லாபத்தொகை வழங்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள், நகையை வழங்க கேட்டு நிதி நிறுவனத்தில் முறையிட்டனர். தொடர்ந்து, கடந்த, 21ல் அப்பகுதி மக்கள், இப்ராஹிம் சாருக் மீது அரவக்குறிச்சி போலீசில் புகாரளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 'தங்களது நகையை பார்க்க வேண்டும்' எனக்கூறி, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் கேட்டுள்ளனர். அப்போது, 'நீங்கள் முதலீடு செய்யும்போது பணியாற்றிய நபர் தற்போது பணியில் இல்லை' எனக்கூறி, மக்களை திரும்ப அனுப்ப நிறுவனம் முயற்சித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அரவக்குறிச்சி போலீசார், தர்ணாவில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அந்த நிதி நிறுவன ஊழியர்கள், 'நாங்கள் எல்லோரும் புதிய ஊழியர்கள்; பழைய ஊழியர்களை வரவழைத்து இதுகுறித்து விசாரிக்கலாம்' என, தெரிவித்ததையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர். இதனால் பள்ளப்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us