/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போலி நிருபர்களால் மோசடி: கரூர் கலெக்டர் எச்சரிக்கை
/
போலி நிருபர்களால் மோசடி: கரூர் கலெக்டர் எச்சரிக்கை
போலி நிருபர்களால் மோசடி: கரூர் கலெக்டர் எச்சரிக்கை
போலி நிருபர்களால் மோசடி: கரூர் கலெக்டர் எச்சரிக்கை
ADDED : டிச 11, 2024 01:34 AM
போலி நிருபர்களால் மோசடி: கரூர் கலெக்டர் எச்சரிக்கை
கரூர், டிச. 11-
'பத்திரிகை நிருபர்கள் என்ற பெயரில், மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கலெக்டர் தங்கவேல் எச்சரித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டத்தில் பத்திரிகை (செய்திதாள்) மற்றும் 'டிவி' பெயரில் சில போலியான நிருபர்கள், அரசு சாராத இயக்கங்களை சேர்ந்தவர்கள், இடைத்தரகர்கள் ஆகியோர், தங்களுக்கு உயர் அலுவலர்களை தெரியும் எனவும், அவர்களிடம் கூறி உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன் என, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறுகின்றனர். மேலும் ஏமாற்றி பணத்தை பறித்து விடுவதாக, மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் வந்துள்ளன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, போலீஸ் மூலம் வழக்கு பதிவு செய்யப்படும்.மேலும், கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும், போலியான நபர்கள் அடையாள அட்டைகளை பயன்படுத்தி, பொது மக்களை ஏமாற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது. அந்த நபர்கள் கண்டறியப்படும் பட்சத்தில், அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு பணிக்கு இடையூறு செய்யும் நபர்கள் குறித்து, அரசுத்துறை அலுவலர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.