/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்
/
மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்
ADDED : பிப் 12, 2026 06:52 AM

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட வேலம்பாடி, லிங்கமநாயக்கம்பட்டி, சாந்தப்பாடி, இனங்கனுார், சேந்தமங்கலம், ஆலமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியத்தின் சார்பில், 1 கோடியே, 37 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது, பணி முடிவடைந்த புதிய கட்டடங்களை திறந்து வைத்ததுடன், அதே மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, ஆண்டிப்பட்டிக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியில் பயிலும், 23 மாணவ, மாணவியருக்கு எம்.எல்.ஏ., இளங்கோ விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சிகளில் அரவக்குறிச்சி தி.மு.க., பிரமுகர்கள், கவுன்சிலர்கள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

