ADDED : ஆக 28, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை, தண்டாயுதபாணி முருகன் கோவிலில், அனைத்திந்திய இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக, பொதுமக்களுக்கு அன்பளிப்பாக விநாயகர் சிலைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்பளிப்பாக களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் வழங்குவது வழக்கம். இந்த வகையில் நேற்று முன்தினம் இரவு, பொது மக்களுக்கு சிலைகள் வழங்கும் விழா நடந்தது.
தேசிய தலைவர் அருள்வேலன் ஆலோசனைபடி, சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் ராமகிருஷ்ணன், கருணாநிதி, மதியழகன், வெங்கடேசன், மஹா விஷ்ணு, ரவி, செந்தில், சரவணன், சக்தி ஆகியோர் செய்திருந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.