தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்


ADDED : பிப் 27, 2024 03:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2024 03:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: அரூர் அடுத்த தீர்த்தமலையில், தீர்த்தகிரீஸ்வரர் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, தீர்த்தமலை வனச்சரகம் சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது.

தீர்த்தமலை வனச்சரக வளாகத்தில் துவங்கிய முகாமை வனச்சரகர் பெரியண்ணன் துவக்கி வைத்தார். இதில், 67 நபர்களுக்கு பொதுமருத்துவம் மற்றும் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 9 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். மேலும், மக்களை தேடி மருத்துவ குழுவினர் மூலம், ரத்த அழுத்தம், சர்க்கரை, நீரிழிவு நோய் பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில், மருத்துவர்கள் இசைத்தமிழ், கோவிந்தராஜ், கண் மருத்துவ உதவியாளர் கலையரசன், ஆய்வுக்கூட பரிசோதனையாளர் தமிழரசன் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us