ADDED : மே 21, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார், ப.வேலுார் அரிமா சங்கம் சார்பில், வரும், 25ல் இலவச கண் சிகிச்சை முகாம், ப.வேலுார் பள்ளி சாலையில் உள்ள அரிமா சங்க வளாகத்தில் நடக்கிறது. முகாமில், கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்தக்கொதிப்பு அளவு, கண்ணில் பிரஷரின் அளவு ஆகியவை இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது. கண் அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு, சேலம் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு, அரிமா சங்கம் சார்பில் அழைத்து சென்று இலவசமாக கண் அறுவை சிகிச்சை நடக்கிறது. முகாமில் கலந்து கொள்பவர்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஜெராக்ஸ் கொண்டுவர வேண்டும்.