sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

1,040 மாணவ, மாணவியருக்கு விலையில்லா லேப்டாப் வழங்கல்

/

1,040 மாணவ, மாணவியருக்கு விலையில்லா லேப்டாப் வழங்கல்

1,040 மாணவ, மாணவியருக்கு விலையில்லா லேப்டாப் வழங்கல்

1,040 மாணவ, மாணவியருக்கு விலையில்லா லேப்டாப் வழங்கல்


ADDED : ஜன 20, 2026 04:56 AM

Google News

ADDED : ஜன 20, 2026 04:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர், தான்தோன்றிமலை அரசு கல்லுாரியில், அரசின் விலையில்லா லேப்டாப் வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, மாணவ, மாணவியர், 1,040 பேருக்கு லேப் டாப் வழங்கி பேசியதாவது:

தமிழ்நாடு அரசு எல்லா துறைகளை விட, கல்-வித்துறைக்கு அதிகமான நிதிகளை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ளது. பள்ளி கல்வித்துறைக்கு மட்டும், 46,767 கோடி ரூபாய் நிதியும், உயர் கல்-விக்கு, 8,494 கோடி என, 55,261 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், புதுமை பெண், தமிழ் புதல்வன், நான் முதல்வன், காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கரூர் மாவட்டத்தில், 4,500 கோடி ரூபாய் அள-விற்கு புதிய திட்டங்கள் நடந்து வருகிறது. கலெக்டர் அலுவலகத்திற்கு அருகில் அறிவியல் பூங்கா திறக்கப்பட்டுள்ளது.

சுங்ககேட் பகுதியில், இசை பள்ளிக்கு புதிய கட்-டடம், தான்தோன்றி மலையில் தோழி தங்கும் விடுதி கட்டும் பணி நடக்கிறது.

இவ்வாறு, அவர் பேசினார்.

விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம் (குளித்-தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்-திரன், மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லுாரி முதல்வர் (பொ) சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us