ADDED : அக் 22, 2024 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணர் கோவிலில், ஹிந்து சமய
அறநிலையத்துறை சார்பில், ஐந்து ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது.கரூர் மாநராட்சி மேயர் கவிதா தலைமை வகித்தார். திருமணத்-தையொட்டி,
மணப்பெண்ணுக்கு தங்க தாலி, சுப முகூர்த்த பட்-டுப்புடவை, ரவிக்கை, மணமகனுக்கு
பட்டு ஜரிகை வேட்டி, பட்டு ஜரிகை துண்டு, பட்டு சட்டை மற்றும் சுப முகூர்த்த பொருட்கள்
வழங்கப்பட்டன. மேலும் மணமக்களுக்கு மிக்ஸி, பீரோ, கட்டில், மெத்தை, பாய், பித்தளை
குத்துவிளக்கு, எவர் சில்வர் குடம் உள்ளிட்ட, 20 வகையான சீர்வரிசை பொருட்கள்
வழங்கப்பட்டன. தொடர்ந்து மணமக்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு
உணவு வழங்கப்பட்டது.