ADDED : அக் 21, 2024 07:35 AM
அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி: பள்ளப்பட்டியில், நேற்று இலவச மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமில் டாக்டர்கள் சண்முகம், சுப்ரமணியன், விஜித்ரா ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
உடல் எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, நாடித்துடிப்பு உள்ளிட்டவையும், இ.சி.ஜி., தேவைப்படுவோருக்கு எடுக்கப்பட்டது. மருத்துவ முகாமில் கலந்து கொண்ட, 100க்கும் மேற்பட்டோருக்கு மருந்து, மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது.
