ADDED : ஜூன் 22, 2026 04:20 AM
கரூர்:கரூர் அருகே, கறவை மாடு வளர்ப்பு குறித்து, ஒரு நாள் பயிற்சி முகாம், நாளை நடக்கிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கரூர்
அருகே, பண்டுதகாரன் புதுாரில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ
அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், நாளை காலை, 10:30
மணிக்கு கறவை மாடு வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடக்கிறது.
அதில்,
கறவை மாடு வளர்ப்பு முறைகள், வீட்டமைப்பு, தீவன மேலாண்மை உள்ளிட்ட
பல்வேறு தலைப்புகளில், பல்கலை பேராசிரியர்களால், ஒரு நாள் பயிற்சி
முகாம், 20 விவசாயிகளுக்கு மட்டும் நடத்தப்பட உள்ளது. பயிற்சி
கட்டணமாக, 590 ரூபாய் செலுத்த வேண்டும். விபரங்களுக்கு, 04324-294335
மற்றும் 73390-57073 ஆகிய எண்களில் ஆர்வம் உள்ள விவசாயிகள் தொடர்பு
கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
