/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழூர் டி.என்.பி.எல்., சார்பில் இலவச கால்நடை மருத்துவ முகாம்
/
புகழூர் டி.என்.பி.எல்., சார்பில் இலவச கால்நடை மருத்துவ முகாம்
புகழூர் டி.என்.பி.எல்., சார்பில் இலவச கால்நடை மருத்துவ முகாம்
புகழூர் டி.என்.பி.எல்., சார்பில் இலவச கால்நடை மருத்துவ முகாம்
ADDED : ஜன 06, 2025 01:46 AM
கரூர்: கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., அய்யம்-பாளையம், மலையம் பாளையத்தில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலத்திட்ட பணிகள் சார்பில் இல-வச சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
இதில், முதுநிலை மேலாளர்- மனிதவளம் வெங்கடேசன் தலைமை வகித்தார்.  எருமை, பசு மாடு, எருது, நாய், கோழி, ஆடு என மொத்தம், 440 கால்நடைகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு நோய் தடுப்பு மருந்துகள் வழங்கப்-பட்டன.   மாடுகளுக்கு சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சை, நோய் மாதிரி ஆய்வுப்பணி, கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கால்நடைகளுக்கு ஆண்மை நீக்கம், கோழி களுக்கு கோழிக்க-ழிச்சல் தடுப்பூசி மற்றும் பசு,
எருமையினங்களுக்கு கோமாரி நோய் தடுப்பு மருந்து மற்றும் நாய்களுக்கான தடுப்பூசி ஆகியவை இலவசமாக வழங்கப்பட்-டன. கால்நடை டாக்டர் கோபிநாத் மற்றும் மருத்துவக்குழு-வினர், கால்நடைகளை பரிசோதனை செய்து இலவச சிகிச்சை மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய ஆலோசனைகளை வழங்-கினர்.