/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி., பிறந்த நாள் விழா
/
சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி., பிறந்த நாள் விழா
ADDED : செப் 06, 2025 01:21 AM
கரூர் :சுதந்திர போராட்ட தியாகி வ.உ. சிதம்பரனாரின், 154 வது பிறந்த நாள் விழா, கரூர் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதில், வ.உ. சிதம்பரனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், சிவகாம சுந்தரி, துணை மேயர் தாரணி சரவணன், பகுதி செயலர்கள் ராஜா, ஜோதிபாசு, ஒன்றிய செயலர்கள் வேலுசாமி, முத்துகுமாரசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
* கரூர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், வ.உ. சிதம்பரனார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதில், வ.உ. சிதம்பரனார் உருவப்படத்துக்கு, மாவட்ட அ.தி.மு.க., செயலர் விஜயபாஸ்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, துணை செயலர்கள் ஆலம் தங்கராஜ், மல்லிகா, ஒன்றிய செயலர் கமலகண்ணன் உள்பட, பலர் பங்கேற்றனர்.
* கரூர் மாவட்ட வி.சி.க., சார்பில், தான் தோன்றிமலையில் உள்ள வ.உ. சிதம்பரனார் சிலைக்கு, மாவட்ட செயலர் இளங்கோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, வணிகர் அணி மாநில துணை செயலாளர் கண்மணி ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் அகரமுத்து, நகர செயலளர்ள் சக்தி வேல், அருள், மாணவர் அணி செயலர் தீபக் குமார் உள்பட, பலர் பங்கேற்றனர்.
* கரூர் மாவட்ட வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில், மனோகரா கார்னரில் வ.உ. சிதம்பரனார் உருவப்படத்துக்கு, மாநில இளைஞர் அணி தலைவர் ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் வினோத் குமார், செயலாளர் கார்த்திக் பாண்டியன், கொங்கு இளைஞர் பேரவை (தனியரசு)மாவட்ட செயலாளர் அருள் உள்பட, பலர் பங்கேற்றனர்.