/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சுதந்திர போராட்ட வீரர்கள், வாரிசுகள் சங்க கூட்டம்
/
சுதந்திர போராட்ட வீரர்கள், வாரிசுகள் சங்க கூட்டம்
ADDED : ஜூன் 30, 2025 04:30 AM
கரூர்: கரூர் மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள், வாரிசுகள் சங்க கூட்-டமைப்பு கூட்டம், மாநில தலைவர் நடராஜன் தலைமையில் நேற்று நடந்தது.
அதில், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன பிரதிநி-தித்துவம் வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, அதேபோல் சுதந்திர போராட்ட வீரர்களுக்கும், நியமன பிரதிநி-தித்துவம் வழங்க வேண்டும், அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்க வேண்டும், காலனி பெயர் நீக்கப்பட் ட பகுதிகளுக்கு, தியாகி என்ற பெயரை சூட்ட வேண்டும், தியாகிகளின் வாரிசுக-ளுக்கு அரசு பஸ்களில் இலவசமாக செல்ல அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் ஞானவேல், மாவட்ட தலைவர் அவனாசி லிங்கம், துணைத்
தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ராதா கிருஷ்ணன், அமைப்பு செயலாளர் ஓம் சக்தி சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.