/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரி-வலம்
/
ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரி-வலம்
ADDED : டிச 05, 2025 11:00 AM
குளித்தலை: குளித்தலை அருகே, அய்யர்மலை ரத்தினகிரீஸ்-வரர் மலைக்கோவிலில், பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்றனர்.
செங்குத்தான மலையில், 1,017 படிகள் கொண்ட மலை உச்சியில் சிறும்பார் குழலி உடனுறை ரத்-தினகிரீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். பவுர்ணமியையொட்டி நேற்று மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை பக்-தர்கள், குடிப்பாட்டுக்காரர்கள் கையில் ஊதுபத்தியை ஏந்தியபடி, மலையை சுற்றியுள்ள 3 கி.மீ., துாரம் கிரிவலம் சென்று தரிசனம் செய்-தனர்.
சில பக்தர்கள் மலை மீது ஏறி உச்சியில் உள்ள, சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரரை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம், குடிநீர் வழங்கப்பட்டது. குளித்தலை அரசு போக்குவரத்து கிளை பணிமனை சார்பில் பஸ் வசதி செய்யப்பட்டது. டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

