ADDED : செப் 15, 2026 07:23 AM
கரூர்,:கரூரில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, களிமண் சிலைகள் உள்ளிட்ட, பூஜை பொருட்கள் விற்பனை, ஜோராக நடந்தது.
நாடு முழுவதும் நேற்று, விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. தமிழகம் முழுவதும் நேற்று பொது இடங்களில் பா.ஜ., - இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, பொது நல அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கரூர் மாவட்டத்தில் நேற்று, அனைத்து கோவில்களிலும், விநாயகர் சதுர்த்தி விழா வழக்கம் போல், வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி, அருகம்புல், எருக்கம் பூ மாலை, பழ வகைகள், மா இலை, வாழை மரம், வீடுகளில் வைத்து வணங்கக்கூடிய சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஜோராக நடந்தது. பொதுமக்கள் ஆர்வத்துடன், பூஜைக்குரிய பொருட்களை கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட், கரூர் வெங்கமேடு, வேலாயுதம்பாளையம் உழவர் சந்தைகளில் நேற்று வாங்கி சென்றனர்.
* கரூர் அண்ணா சாலை கற்பக விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா வேத பாராயணம், மூர்த்தி ேஹாமங்களுடன் தொடங்கியது. பிறகு விநாயகருக்கு, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம், மஹா அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் கற்பக விநாயகர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல், கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவில், காந்தி கிராமம் சக்தி விநாயகர் கோவிலில் உள்ள விநாயகர், தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கரூர் எல்.ஜி.பி., நகர் குபேர சக்தி விநாயகர் கோவில், ரங்கநாயகிபுரம் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், பசுபதிபுரம் வேம்பு மாரியம்மன், அண்ணா நகர் கற்பக விநாயகர் கோவில்களில் உள்ள விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
* கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரகூர், மேட்டுப்பட்டி, கொம்பாடிப்பட்டி, கிருஷ்ணராயபுரம், மாயனுார், மணவாசி, பஞ்சப்பட்டி உள்பட பல்ேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து தீபாராதனை காட்டப்பட்டது. கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
