/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஆற்றில் விசர்ஜனம்
/
கரூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஆற்றில் விசர்ஜனம்
கரூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஆற்றில் விசர்ஜனம்
கரூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஆற்றில் விசர்ஜனம்
ADDED : ஆக 29, 2025 01:47 AM
கரூர், கரூர் மாவட்டத்தில், நேற்று விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டது.
நாடு முழுவதும் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. கரூர் மாவட்டத்தில் ஹிந்து முன்னணி, பா.ஜ.,
-வி.எச்.பி., -சிவசேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட, பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கரூர், வேலாயுதம்பாளையம், குளித்தலை, அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 415 விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கரூர் நகர் பகுதி, வெங்கமேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து நேற்று, 50-க்கும்
மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக கரூர் 80 அடி சாலை பகுதிக்கு எடுத்து வரப்பட்டன. இங்கிருந்து கோவை சாலை, ஐந்து ரோடு வழியாக வாங்கல் காவிரி ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்ட இடத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டன. ஊர்வலத்தை முன்னிட்டு கரூர் எஸ்.பி., ஜோஷ் தங்கையா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
* நொய்யல், மரவாபாளையம், புன்னம் சத்திரம், தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர், திருக்காடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
* வேலாயுதம்பாளையம், புகழிமலை அடிவாரம், பாலத்துறை, அய்யம்பாளையம், தோட்டக் குறிச்சி, தளவாப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை நடந்து வந்தது.
இதையடுத்து நேற்று அனைத்து ஊர்களில் இருந்து சிலைகள், ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் அங்கிருந்து புகழூர் முக்கிய வீதிகள் வழியாக, விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.