/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குப்பை சேகரிக்கும் தொட்டி மக்கள் எதிர்பார்ப்பு
/
குப்பை சேகரிக்கும் தொட்டி மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 06, 2024 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர்-திருச்சி சாலை காந்திகிராமம் பூங்கா அமைந்துள்ள பகுதியில்,குப்பையை சேகரிக்கும் வகையில் தொட்டிகள் வைக்கப்படவில்லை.
இதனால், அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள், குப்பைகளை சாலையில் கொட்டி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் சுகாதாரகேடுஏற்பட்டு வருகிறது. மேலும், குப்பைகளில் இருந்து துர்நாற்றமும்ஏற்படுவதால், அப்பகுதி மக்கள் தொற்று நோய் ஏற்படும் அபாயத்தில் உள்ளனர். இதனால், காந்தி கிராமம் பூங்கா உள்ள பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை சேகரிக்க தொட்டிகள் வைக்க, கரூர் மாநகராட்சிநிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

