ADDED : ஜூலை 06, 2026 04:47 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்-வாங்கல்
சாலை வழியாக, நாமக்கல் மாவட்டம், மோகனுார், திருச்சி மாவட்டம்
காட்டுபுத்துார் பகுதிகளுக்கு பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள்
சென்று வருகின்றன.
இந்நிலையில், வாங்கல் சாலையில் கடந்த சில
நாட்களாக, அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது.குறிப்பாக, இறைச்சி
கழிவுகள், மருத்துவ கழிவுகள் அதிகளவில் குவிந்துள்ளன. இதனால், அந்த
பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவஸ்தைக்குள்ளாகின்றனர்.
மேலும்,
சாலையில் குவிந்துள்ள குப்பை கள் காற்றில் பறப்பதால், வாகன ஓட்டிகள்,
டூவீலர்களில் செல்கிறவர்கள் தடுமாறுகின்றனர். குறிப்பாக, வாங்கல்
சாலை வாங்கப்
பாளையம் பிரிவில் அதிகளவில் குப்பை
தேங்கியுள்ளது. இதனால், கரூர்-வாங்கல் சாலையில் குவிந்துள்ள குப்பையை
உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
