/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே கழிவுநீருடன் கலந்த குப்பை: துர்நாற்றத்தால் சீர்கேடு
/
கரூர் அருகே கழிவுநீருடன் கலந்த குப்பை: துர்நாற்றத்தால் சீர்கேடு
கரூர் அருகே கழிவுநீருடன் கலந்த குப்பை: துர்நாற்றத்தால் சீர்கேடு
கரூர் அருகே கழிவுநீருடன் கலந்த குப்பை: துர்நாற்றத்தால் சீர்கேடு
ADDED : நவ 18, 2024 03:44 AM
கரூர்: கரூர் அருகே, சாலையில் கழிவுநீருடன் குப்பை கலந்துள்ளது. இதனால், ஏற்படும் துர்நாற்றத்தால் பொதுமக்கள், தொற்று நோய் பீதியில் உள்ளனர்.
கரூர் - ஈரோடு சாலை வடிவேல் நகர் காவலர் குடியிருப்பு பகு-தியில், தனியார் வங்கி தலைமை அலுவலகம், வீடுகள், வியா-பார நிறுவனங்கள், தனியார் பள்ளிகள் உள்ளன. இந்நிலையில், கடந்த, சில நாட்களாக காவலர் குடியிருப்பு எதிரே சாலையில், கொட்டப்பட்ட குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கியுள்ளன. மேலும், மழை காரணமாக வாய்க்காலில் இருந்து வெளியேறிய கழிவுநீர், குப்பையில் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வரு-கின்றனர்.எனவே, கரூர் - ஈரோடு சாலை வடிவேல் நகரில் காவலர் குடியி-ருப்பு எதிரே, கழிவுநீருடன் கலந்துள்ள, குப்பையை அகற்ற ஆண்டாங்கோவில் கிழக்கு கிராம பஞ்சாயத்து நிர்வாகம், நடவ-டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.