ADDED : ஏப் 27, 2026 03:04 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்-மதுரை
தேசிய நெடுஞ்சாலையில், ஆண்டாங்கோவில் பிரிவு சாலையோரம் குப்பை
கொட்டப்படுகிறது. ஆனால், அவை அள்ளப்படாமல் பல மாதங்களாக தேங்கி,
சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. வீடுகள் மற்றும் வர்த்தக
நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குப்பையுடன்
சேர்ந்துள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.
பலமுறை பஞ்.,
நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும், எந்த பயனும் இல்லை என, மக்கள்
கூறுகின்றனர். தேங்கிய குப்பையை சிலர் தீ வைத்து எரிக்கின்றனர்.
அப்போது, சாலை முழுவதும் புகை மண்டலமாக உள்ளதால், மூச்சுத்திணறல்
ஏற்படுகிறது. எனவே, உள்ளாட்சி நிர்வாகம் சாலையோரம் குப்பை அகற்ற
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
