/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அம்மன் நகர் சாலையில் குவியும் குப்பையால் சுகாதார சீர்கேடு
/
அம்மன் நகர் சாலையில் குவியும் குப்பையால் சுகாதார சீர்கேடு
அம்மன் நகர் சாலையில் குவியும் குப்பையால் சுகாதார சீர்கேடு
அம்மன் நகர் சாலையில் குவியும் குப்பையால் சுகாதார சீர்கேடு
ADDED : நவ 01, 2024 01:46 AM
அம்மன் நகர் சாலையில் குவியும்
குப்பையால் சுகாதார சீர்கேடு
கரூர், நவ. 1-
கரூர், சின்னஆண்டாங்கோவில் சாலையில் அம்மன் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், சில நாட்களாக குப்பை அள்ளப்படவில்லை. சாலையோரம் ஆங்காங்கே குப்பை குவிந்துள்ளது.
சாலையில் வாகனங்களில் செல்ல, நடந்து செல்ல சிரமமாக உள்ளது. காற்றில் பறக்கும் குப்பையால், வாகன ஓட்டிகள்
அவதிப்படுகின்றனர். சுகாதார சீர்கேட்டால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக, அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். சில பகுதிகளில், குப்பைக்கு தீ வைக்கப்படுவதால், புகை மூட்டம்
ஏற்படுகிறது.
இதுபோல, கரூர் ரத்தினம் சாலையில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியின் வழியாக, வாங்கல், நெருர், பசுபதிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் ரத்தினம் சாலை வழியாக சென்று வருகிறது.
பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் காய்கறி கழிவுகள், ரத்தினம் சாலையோரம் கொட்டுவதால், பல்வேறு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
காய்கறி கழிவுகள் மழையோடு சேர்ந்து மக்கி, ஒருவித துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதன் காரணமாக இந்த பகுதியினர் பல்வேறு தொற்றுநோய்களுக்கு ஆளாகின்றனர்.

