/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சர்வீஸ் சாலையில் தேங்கிய குப்பையால் தொற்று அபாயம்
/
சர்வீஸ் சாலையில் தேங்கிய குப்பையால் தொற்று அபாயம்
ADDED : ஜன 01, 2025 01:28 AM
சர்வீஸ் சாலையில் தேங்கிய
குப்பையால் தொற்று அபாயம்
கரூர், ஜன. 1-
கரூர் அருகே சர்வீஸ் சாலையில், குப்பை அள்ளப்படாமல் தேங்கியுள்ளது. தொற்று நோய் பரவுவதை தடுக்க, கழிவுகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சுக்காலியூர் ரவுண்டானா அருகே, கரூர் நகருக்கு சர்வீஸ் சாலை செல்கிறது. கரூரில் இருந்து மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட, தென் மாவட்டங்களுக்கு, அந்த சர்வீஸ் சாலை வழியாக பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், சர்வீஸ் சாலையில் இரவு நேரங்களில், குப்பை, இறைச்சி கழிவுகளை சிலர் வாகனங்களில் வந்து கொட்டி விட்டு செல்கின்றனர். அதை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் நாள்தோறும் அகற்றுவது இல்லை.இதனால், தேங்கியுள்ள குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. கரூர் சுக்காலியூர் ரவுண்டானா பகுதியில், தொற்று நோய் அபாயம் உள்ளது. எனவே, சர்வீஸ் சாலையில் தேங்கியுள்ள குப்பையை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

