ADDED : ஜூன் 20, 2026 05:14 AM

அ நிறம் | அளவு
கரூர்:வெள்ளியணை சமத்துவபுரம் சாலையில், அதிகளவில் குப்பை குவிந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
வெள்ளியணை
சமத்துவபுரம் செல்லும் சாலையில் பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள்
சென்று வருகின்றன. இந்நிலையில், சமத்துவபுரம் சாலையில் கடந்த சில
நாட்களாக, அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது. குறிப்பாக, இறைச்சி
கழிவுகள் குவிந்துள்ளது.
இதனால், அந்த பகுதியில் வசிக்கும்
பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். மேலும், சாலையில்
குவிந்துள்ள குப்பை காற்றில் பறப்பதால், வாகன ஓட்டிகள், டூவீலர்களில்
செல்வோர் தடுமாறுகின்றனர். எனவே சமத்துவபுரம் சாலையில் குவிந்துள்ள
குப்பையை, உடனடியாக அகற்ற பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
