/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மேம்பாலம் அடியில் குப்பை கொட்டி குவிப்பால் துர்நாற்றம்
/
மேம்பாலம் அடியில் குப்பை கொட்டி குவிப்பால் துர்நாற்றம்
மேம்பாலம் அடியில் குப்பை கொட்டி குவிப்பால் துர்நாற்றம்
மேம்பாலம் அடியில் குப்பை கொட்டி குவிப்பால் துர்நாற்றம்
ADDED : மே 26, 2025 04:09 AM
கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கொட்டப்படும் குப்-பையால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்சாயத்துக்குட்பட்ட வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பையை, கரூர்-திருச்சி பழைய நெடுஞ்சாலை, சிந்தலவாடி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கொட்டி குவிக்கின்றனர். அவ்வாறு கொட்டப்படும் குப்பைகள், அந்த பகுதி முழுவதும் பரவி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், கோழிக்கழிவுகள் அதிகம் கொட்டப்படுவதால், அந்த சாலை வழியாக செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, இப்பகுதியில் கொட்டும் குப்பையை முழுவதும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.