தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர்-வாங்கல் சாலையில் குப்பையால் கடும் அவதி

கரூர்-வாங்கல் சாலையில் குப்பையால் கடும் அவதி

கரூர்-வாங்கல் சாலையில் குப்பையால் கடும் அவதி


ADDED : பிப் 23, 2026 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 06:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்; கரூர்-வாங்கல் சாலை வழியாக, நாமக்கல் மாவட்டம், மோகனுார், திருச்சி மாவட்டம் காட்-டுபுத்துார் பகுதிகளுக்கு பஸ், லாரி, கார் உள்-ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நி-லையில், வாங்கல் சாலை அரசு காலனி பகு-தியில், கடந்த சில நாட்களாக, அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது.

குறிப்பாக, இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கழி-வுகள் அதிகளவில் குவிந்துள்ளது. இதனால், அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். மேலும், சாலையில் குவிந்-துள்ள குப்பைகள் காற்றில் பறப்பதால், வாகன ஓட்டிகள், டூவீலர்களில் செல்வோர் தடுமாறு-கின்றனர். குறிப்பாக, வாங்கல் சாலை வாங்கப்-பாளையம் பிரிவில் அதிகளவில் குப்பை தேங்கி-யுள்ளது. இதனால், கரூர்-வாங்கல் சாலையில் குவிந்துள்ள குப்பையை உடனடியாக அகற்ற, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us