ADDED : அக் 19, 2024 02:09 AM
அ நிறம் | அளவு
கரூர்: வெள்ளியணை அருகே, முனியப்பன் கோவிலில் காஸ் சிலிண்டர் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை செல்லாண்டிபட்டியில் முனி-யப்பன் கோவில் உள்ளது. அதில், அதே பகுதியை சேர்ந்த ராஜ-மாணிக்கம், 60, என்பவர் பூசாரியாக உள்ளார். இந்நிலையில், முனியப்பன் கோவில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த, மூன்று காஸ் சிலிண்டர்களை கடந்த, 16ல் காணவில்லை. இது குறித்து, ராஜமாணிக்கம் கொடுத்த புகார்படி, சிலிண்டர்களை திருடியதாக திருச்சியை சேர்ந்த ராமு, 43; என்பவரை வெள்ளியணை போலீசார் கைது செய்தனர்.
