/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கொ.ம.தே.க.,சார்பில் பொதுக்குழு கூட்டம்
/
கொ.ம.தே.க.,சார்பில் பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜன 06, 2024 10:45 AM
கரூர்: கரூர் கிழக்கு மாவட்ட, கொ.ம.தே.க., பொதுக்குழு கூட்டம், செயலாளர் மூர்த்தி தலைமையில், சின்ன கொங்கு திருமண மண்டபத்தில் நடந்தது.
அதில், கரூரில் புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும், கோடங்கிப்பட்டி, வீரராக்கியம் பகுதிகளில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, சுங்கசாவடிகளை அகற்ற வேண்டும், மாட்டு வண்டியில் மணல் அள்ள, அனுமதிக்க வேண்டும், கரூர் மருத்துவ கல்லுாரிக்கு, தீரன் சின்னமலை பெயரை சூட்ட வேண்டும், வரும் தேர்தலில் கரூர் எம்.பி., தொகுதியை கொ.ம.தே.க.,வுக்கு ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன், துணை பொதுச்செயலாளர் சக்தி நடராஜன், வர்த்தக அணி செயலாளர் விசா சண்முகம், மாவட்ட துணை செயலாளர் தங்கவேல், இளைஞர் அணி செயலாளர் விக்னேஷ்வர் உள்பட பலர் பங்கேற்றனர்.