ADDED : ஜூன் 24, 2026 04:55 AM
குளித்தலை:குளித்தலை,
காவிரி நகரில் அண்ணா சமுதாயக்கூடம் இயங்கி வருகிறது. இங்கு ஏழை, எளிய
குடும்பத்தை சேர்ந்த பொதுமக்கள், தங்களது இல்லற நிகழ்வுகள்
அனைத்தையும் குறைந்த வாடகையில் செலுத்தி பயனடைந்து வருகின்றனர்.
மேலும், இந்த மண்டபம் நகரத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளதால்,
அனைத்து பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் எளிதாக அமைந்துள்ளது.
குறைந்த
வாடகை கட்டணம் என்பதால், அனைத்து தரப்பு பொதுமக்களும், அரசியல்
கட்சியினர், கூட்டமைப்பினர் என, பலதரப்பட்ட அமைப்பினர்
மண்டபத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மண்டபத்தில் அனைத்து
வசதிகள் இருந்தும், மின்தடை நாட்கள் மற்றும் மின்தடையின்போது மின்
விளக்குகள்
ஒளிப்பெருக்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே,
மக்கள் நலன் கருதி, ஜெனரேட்டர் வசதி அமைத்துக்கொடுக்க வேண்டும் என,
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
