தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வரத்து அதிகரிப்பால் இஞ்சி விலை குறைவு

வரத்து அதிகரிப்பால் இஞ்சி விலை குறைவு

வரத்து அதிகரிப்பால் இஞ்சி விலை குறைவு


ADDED : மார் 28, 2026 04:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 04:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்; வடமாநிலங்களில் இருந்து இஞ்சி வரத்து அதிக-ரித்துள்ள நிலையில், அதன் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.

தமிழகத்தில் இஞ்சி சாகுபடி கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மட்டும் நடக்கிறது. இந்த சாகுபடி தமிழக தேவைக்கு போதுமானதாக இல்லை.இதனால் அசாம், மகாராஷ்டிரா, மேற்கு வங்-காளம், மேகலாயா, மிசோராம், நாகலாந்து, உத்-தரகாண்ட் மற்றும் கர்நாடகா, கேரளா மாநிலங்-களில் இருந்து இஞ்சி கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், நடப்பாண்டு வட மாநிலங்களில் இஞ்சி விளைச்சல் அதிகரித்து தமிழகத்துக்கு வரத்து அதிகரிக்க தொடங்கியதால், அதன் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.

இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது:

கடந்த, 2020ல் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க, இஞ்சியை உணவில் சேர்த்து கொள்ளலாம் என, சித்த மருத்துவர்கள் கூறி-யதால், வீடுகளில் இஞ்சி தேவை ஆறு ஆண்டுக-ளாக அதிகரித்துள்ளது.

இதனால், இஞ்சி விலை அவ்வப்போது அதிகரித்-தது. கடந்தாண்டு அக்., மாதம் ஒரு கிலோ இஞ்சி, 180 ரூபாய் வரை விற்றது. பிறகு, வரத்து அதிக-ரிப்பால் விலை படிப்படியாக குறைய தொடங்கி-யது. தற்போது ஒரு கிலோ இஞ்சி, 70 முதல், 80 ரூபாய் வரை விற்கிறது.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us