ADDED : மே 24, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, ஆவத்திபாளையம் அடுத்த சுபாஷ் நகரை சேர்ந்தவர் சரவணகுமார், 35; இவரது மகள் திவ்ய
தர்ஷினி, 14. அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, திவ்யதர்ஷினி வீட்டில் இருந்து வெளியே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் இருந்த நாய் ஒன்று, திடீரென திவ்யதர்ஷினியை பார்த்து குரைத்துள்ளது.
இதனால் பயந்த திவ்யதர்ஷினி, ஓட முற்பட்டபோது நாய் அவரை துரத்திச்சென்று கடித்துள்ளது. நாய் கடித்ததில் கை, காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள், நாயை விரட்டி அடித்து சிறுமியை மீட்டு பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.