/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை ஜோர்
/
சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை ஜோர்
ADDED : ஏப் 27, 2025 04:49 AM
கிருஷ்ணராயபுரம்: சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை தீவிரமாக நடந்தது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்சா-யத்து, இரும்பூதிப்பட்டி சந்தையூர் வாரச்சந்தை சனிக்கிழமை-தோறும் செயல்படுகிறது. இந்த சந்தையில் காலையில் ஆடு, கோழி மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. சந்-தைக்கு சிவாயம், வயலுார், பாப்பகாப்பட்டி, கழுகூர், தோகை-மலை, சத்தியமங்கலம் பஞ்சாயத்து பகுதிகளை சேர்ந்த விவசா-யிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, கோழிகளை கொண்டுவந்து விற்-பனை செய்கின்றனர்.
தற்போது, ஏழு கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, 6,000 ரூபாய், நாட்டுக்கோழி கிலோ, 550 ரூபாய் என்ற விலையில் விற்-பனை செய்யப்பட்டது. குளித்தலை, சேங்கல், லாலாப்பேட்டை, அய்யர்மலை, தேசியமங்களம், பஞ்சப்பட்டி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், ஆடு, கோழிகளை அதிகளவில் வாங்கி சென்றனர். இதனால் வியாபாரம் ஜோராக நடந்தது.

