ADDED : ஏப் 04, 2026 04:53 AM
அ நிறம் | அளவு
அந்தியூர், வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள எண்ணமங்கலம் முனியப்பன் கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் தேவண்ணன், 80; இவரது தோட்டத்தில் பர்கூர்மலை தாமரைக்கரை அருகிலுள்ள ஆலனையை சேர்ந்த கார்த்தி, 19, தங்கி வேலை செய்து வந்தார்.
கார்த்தி மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர் மணிகண்டன் ஆகியோர், தேவண்ணன் தோட்டத்தில் ஒரு வெள்ளாட்டை, நேற்று முன்தினம் இரவு திருடி சென்றனர். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசில் தேவண்ணன் மருமகன் சோமு நேற்று புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார், கார்த்தியை கைது செய்து, பவானி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வியாபாரியிடம் விற்பனை செய்த ஆட்டை மீட்ட போலீசார், தப்பிய மணிகண்டனை தேடி வருகின்றனர்.
