/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே வீட்டில் தங்க நகை, பணம் திருட்டு
/
கரூர் அருகே வீட்டில் தங்க நகை, பணம் திருட்டு
ADDED : ஜூலை 19, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் :கரூர் அருகே, வீட்டுக்குள் புகுந்து தங்க நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், வெங்கமேடு காமதேனு நகரை சேர்ந்தவர் சேகர், 62; இவர் கடந்த, 16ல் இரவு வீட்டில், குடும்பத்தினருடன் துாங்கி கொண்டிருந்தார். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஒரு பவுன் தங்க நகை, 20 ஆயிரம் ரூபாய், 400 கிராம் வெள்ளி கட்டி, சி.பி.யு., ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை திருடி கொண்டு சென்றனர். இதுகுறித்து, சேகர் போலீசில் புகார் செய்தார். வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

