/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மூதாட்டி வீட்டில் தங்க நகை திருட்டு
/
மூதாட்டி வீட்டில் தங்க நகை திருட்டு
ADDED : ஜூலை 08, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், தென்னிலை அருகே, மூதாட்டி வீட்டில் தங்க நகை திருடிய மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டம், தென்னிலை அருகே கோடந்துார் பகுதியை சேர்ந்த நல்லசாமி என்பவரது மனைவி மணியாத்தாள், 70; இவர் கடந்த, 5ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, கோவைக்கு சென்றுள்ளார்.
பிறகு மறுநாள் மணியாத்தாள் வீட்டுக்கு சென்ற போது, கதவு திறக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டிருந்த, ஒரு பவுன் தங்க நகையை காணவில்லை. மர்ம நபர் திருடி சென்றுள்ளார். இதுகுறித்து, மணியாத்தாள் போலீசில் புகார் செய்தார்.தென்னிலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

