ADDED : பிப் 25, 2024 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: கரூரில், கலைஞர் நுாற்றாண்டு விழாவையொட்டி கல்லுாரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, வினாடி வினா நடத்தப்பட்டது.
இதில், குளித்தலை அரசு கலைக்கல்லுாரி விலங்கியல் துறை மாணவி சபரீஸ்வரி கட்டுரை போட்டியில் முதலிடம் பெற்றார். இவரை பாராட்டி தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக, 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு, தகுதி சான்றிதழ் பெற்றார்.
பேச்சு போட்டியில் கலந்து கொண்ட ஆங்கிலத் துறை மாணவர் மோகன்தாஸ் மூன்றாமிடம் பெற்று, 2,000 ரூபாய் பரிசு பெற்றார். வினாடி வினா குழு போட்டியில் சம்பூர்ணதேவி, காவ்யா, அமீர்தீன் ஆகியோர் வெற்றி பெற்று கல்லுாரிக்கு பெருமை சேர்த்தனர். மாணவர்களை முதல்வர் ரவிச்சந்திரன் பாராட்டினார்.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்துறை தலைவர் ஜெகதீசன் செய்திருந்தார்.