/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாங்கல் குப்புச்சிபாளையத்தில் அரசு குழந்தைகள் மைய கட்டடம் சேதம்
/
வாங்கல் குப்புச்சிபாளையத்தில் அரசு குழந்தைகள் மைய கட்டடம் சேதம்
வாங்கல் குப்புச்சிபாளையத்தில் அரசு குழந்தைகள் மைய கட்டடம் சேதம்
வாங்கல் குப்புச்சிபாளையத்தில் அரசு குழந்தைகள் மைய கட்டடம் சேதம்
ADDED : டிச 08, 2024 01:17 AM
வாங்கல் குப்புச்சிபாளையத்தில்
அரசு குழந்தைகள் மைய கட்டடம் சேதம்
கரூர், டிச. 8-
கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாங்கல் குப்புச்சிபாளையத்தில், குழந்தைகள் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த மையம் செயல்படும் கட்டடம் சேதமடைந்துள்ளது. கட்டடத்தின் சுவர்களில், ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டும், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வருகின்றன.
பலத்த காற்றுவீசினால் மையத்தின் மேற்கூரை துாக்கி வீசப்படும் நிலையில் உள்ளது. அங்கன் வாடி மைய கட்டடம் பயன்பாட்டுக்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால், அங்கு படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, வேறு இடத்துக்கு மையத்தை மாற்ற வேண்டும். பின், கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.