/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு அலுவலர் கழக நிர்வாகிகள் ஆலோசனை
/
அரசு அலுவலர் கழக நிர்வாகிகள் ஆலோசனை
ADDED : ஜூன் 23, 2025 05:42 AM
கரூர்: தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம், கரூர் மாவட்ட, சி, டி பிரிவு சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட தலைவர் நீலகண்டன் தலைமையில், காந்தி கிராமத்தில் நடந்தது. அதில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கரூர் மாவட்டத்தில், பல துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கரூரில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தை சுற்றி, சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன.
கூட்டத்தில், மாவட்ட துணைத்தலைவர்கள் விமலாதித்தன், இந்திராணி, விஜய் ஆனந்த், பொருளாளர் அங்குதாயி, அமைப்பு செயலாளர் ரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.