/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர்
/
கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர்
கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர்
கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர்
ADDED : மே 24, 2025 02:10 AM
கரூர், கரூர் மாவட்டத்தில், அரசு ஊழியர் சங்கத்தினர், நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
சின்னதாராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய, வட்டார மருத்துவ அலுவலர் மோகனவள்ளியின், ஊழியர் விரோத போக்கை கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபடுதல், கலெக்டர் அலுவலகம் முன் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டம் ஆகிய, மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்தது.
அதன்படி, நேற்று முதல் கட்டமாக அரசு ஊழியர் சங்க, கரூர் மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில், கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் உள்ள, அரசு ஊழியர் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு பணியில் ஈடுபட்டனர்.