/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
/
அரசு ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 27, 2024 07:21 AM
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க, கரூர் மாவட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். ஒப்பந்தம், அவுட் சோர்ஸ், தினசரி ஊதியம் முறை ரத்து செய்ய வேண்டும் அவ்வாறு பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, காலமுறை ஊதியத்தில் வரன்முறைப்படுத்த வேண்டும். பொதுத்துறை, அரசு துறையில் தனியார் மயம் உடனடியாக நிறுத்த வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் திருத்தத்தை உறுதி செய்ய வேண்டும். நிறுத்தி வைத்த டி.ஏ.,வை வழங்க வேண்டும். விரிவான காப்பீடு திட்டத்தை அனைத்து ஊழியர்கள், தினக்கூலி பணியாளர்கள், ஓய்வூதியர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.கூட்டத்தில், மாவட்ட செயலாளர் ஜெயராம், மாவட்ட துணை செயலாளர் இளங்கோ உள்பட பலர் பங்கேற்றனார்.