/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மண்டல அறிவியல் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தகுதி
/
மண்டல அறிவியல் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தகுதி
மண்டல அறிவியல் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தகுதி
மண்டல அறிவியல் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தகுதி
ADDED : நவ 11, 2025 01:52 AM
கரூர், புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மண்டல அளவிலான அறிவியல் மாநாடு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், 34 வது குழந்தைகள் அறிவியல் மாநாடு, நேற்று முன்தினம் கரூரில் தனியார் கல்லுாரியில் நடந்தது.
அதில், நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை என்ற தலைப்பில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர், 220 படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.
இறுதியாக, புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் நவீன் குமார், சத்திய நாராயணன் ஆகியோரது படைப்பு, கரூர் மாவட்ட அளவில்
முதலிடம் பெற்றது.இதையடுத்து, விரைவில் திருப்பூரில் நடைபெற உள்ள, மண்டல அளவிலான மாநாட்டில் மாணவர்கள் நவீன்குமார், சத்தியநாராயணன் ஆகியோர் காட்சிப்படுத்த தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தலைமையாசிரியர் விஜயன், உதவி தலைமையாசிரியர்கள் யுவராஜா, பொன்னுசாமி ஆகியோர் பாராட்டினர்.

