/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் நல சங்க கூட்டம்
/
அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் நல சங்க கூட்டம்
ADDED : நவ 12, 2024 01:34 AM
அரசு போக்குவரத்து கழக
ஓய்வூதியர் நல சங்க கூட்டம்
கரூர், நவ. 12-
அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் நல மீட்பு சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் கதிரேசன் தலைமையில் கரூரில் நடந்தது.
ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழி லாளர்களுக்கு, 107 மாதங்களாக நிறுத்தம் செய்யப்பட்ட, அகவிலைப்படி உயர்வை நீதிமன்ற உத்தரவுபடி வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப் பலன்களை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்றகோரி வரும் டிச., 17 ல் சென்னையில் அரை நிர்வாண போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர்கள் தேவதாஸ், திருநாவுக்கரசு, பொருளாளர் பேச்சியப்பன், கரூர் மண்டல செயலாளர்கள் சவுந்திரராஜன், பொருளாளர் லட்சுமணன், துணைத்தலைவர் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.