/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பா.ஜ., தலைவர் போல கவர்னர் செயல்படுகிறார்: எம்.பி., ஜோதிமணி
/
பா.ஜ., தலைவர் போல கவர்னர் செயல்படுகிறார்: எம்.பி., ஜோதிமணி
பா.ஜ., தலைவர் போல கவர்னர் செயல்படுகிறார்: எம்.பி., ஜோதிமணி
பா.ஜ., தலைவர் போல கவர்னர் செயல்படுகிறார்: எம்.பி., ஜோதிமணி
ADDED : அக் 19, 2024 02:06 AM
கரூர்: ''தமிழக பா.ஜ., தலைவர் போல, கவர்னர் செயல்படுகிறார்,'' என, கரூர் காங்.,--எம்.பி., ஜோதிமணி தெரிவித்தார்.
கரூரில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் கவர்னர் பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில், திராவிடம் என்ற சொல் இடம் பெறவில்லை. அது கண்டனத்துக்குரியது. திராவிடம் என்பது வெறும் சொல் அல்ல. அது தமிழகம் உள்ளிட்ட, நான்கு தென் மாநிலங்களை குறிக்கும்.
தமிழக கவர்னர் தொடர்ந்து, தமிழக அரசையும், முதல்வரையும் நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறார். தமிழக பா.ஜ., தலைவர் போல கவர்னர் செயல்படுகிறார். இதனால் தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு உள்ள, குறைந்த ஓட்டுக்களும் காணாமல் போய் விடும்.
மத்திய அரசு மூலம், தமிழகத்துக்கு வழங்கப்படும் நிதி மக்களின் வரிப்பணம். அது பிரதமர் மோடி வீட்டில் இருந்து வரும் பணம் இல்லை. தமிழகத்தில் இருமொழி கொள்கையால், எந்த பாதிப்பும் இல்லை. இரு மொழி கொள்கையில் படித்த, தமிழ-கத்தை சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.
தமிழக மக்கள், ஹிந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை. தமி-ழகம் முழுவதும் ஹிந்தி பிரசார சபாக்கள் செயல்படுகிறது. சில பள்ளிகளில், மூன்றாவது மொழியாக ஹிந்தி உள்ளது. தமிழ-கத்தில் ஹிந்தி திணிப்பைதான் எதிர்க்கிறோம். சர்வ சிக்ஷா அபியான் திட்டத்துக்கு, உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.