sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கண்டனம்

/

ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கண்டனம்

ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கண்டனம்

ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கண்டனம்


ADDED : டிச 28, 2025 09:29 AM

Google News

ADDED : டிச 28, 2025 09:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மலைக்கொழுந்தன் வெளியிட்ட அறிக்கை:சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக, ஆயி-ரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் 'சம வேலைக்குச் சம ஊதியம்' என்ற கோரிக்கைக்காக போராடி வருகின்றனர். கடந்த சட்டசபை தேர்-தலின் போது, தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

நான்கரை ஆண்டு முடிந்தும் வாக்குறுதி நிறை-வேற்றவில்லை. இந்த கோரிக்கைக்காக, ஒவ்-வொரு முறையும் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பதும், சமாதானப்படுத்தித் திருப்பி அனுப்-புவதுமாகவே இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக போராடி வரும் ஆசிரியர்கள் தாக்குதலுக்கு உள்-ளாக்கப்படுவதும், தரதரவென இழுத்து சென்று பஸ்களில் அலைக்கழிக்கப்படுகின்றனர். அராஜக போக்குடன் கைது செய்திருப்பது, அனைத்து தரப்பு ஆசிரியர்களையும் கவலை கொள்ள செய்கிறது. கடந்த காலத்தில், ஆட்சி மாற்றத்திற்கு காரண-மாக இருந்தவர்கள் அரசு ஊழியர்கள் என்பதை யாரும் மறுத்து விட முடியாது. தமிழக அரசு சார்பில் உரிய பேச்சுவார்த்தை மூலம் சரி செய்ய வேண்டும். போராடும் ஆசிரியர்கள் மீது ஏவப்-படும் அடக்குமுறைகளையும், வழக்குகளையும் கைவிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us