/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கலந்தாய்வை உடனடியாக நடத்த கோரி பட்டதாரி ஆசிரியர்கள் மனு வழங்கல்
/
கலந்தாய்வை உடனடியாக நடத்த கோரி பட்டதாரி ஆசிரியர்கள் மனு வழங்கல்
கலந்தாய்வை உடனடியாக நடத்த கோரி பட்டதாரி ஆசிரியர்கள் மனு வழங்கல்
கலந்தாய்வை உடனடியாக நடத்த கோரி பட்டதாரி ஆசிரியர்கள் மனு வழங்கல்
ADDED : டிச 24, 2024 02:16 AM
கரூர், டிச. 24-
உடனடியாக கலந்தாய்வு நடத்த வேண்டும் என, பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆணையை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2023 அக்., மாதம் வெளியிடப்பட்டது. 2024 பிப்., 4ல், தேர்வு நடத்தப்பட்டது. பின், மே மாதம் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதன்பின், ஜூனில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. ஆகஸ்ட் மாதம் உத்தேச தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, நான்கு மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை கலந்தாய்வு நடக்கவில்லை.
ஆதிதிராவிட பள்ளிகளுக்கு தேர்வாகிய ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து விட்டனர். இதுமட்டுமின்றி, தேர்வு பெற்றவர்கள் பெரும்பாலானவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். அவர்களுக்கு பணி காலம் குறைவு என்பதால், உடனடியாக கலந்தாய்வு நடத்தி பணி வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.