ADDED : மார் 25, 2026 06:48 AM
அ நிறம் | அளவு
கரூர், கரூர் அருகே நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், பட்டமளிப்பு விழா நடந்தது.
வட்டார வள மேற்பார்வையாளர் செல்வகுமார் தலைமை வகித்தார்.
இப்பள்ளியில், 5ம் வகுப்பு படித்த, 87 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது. கலை திருவிழா மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மாறுவேடம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுனர் சந்திரசேகர், பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி உள்பட பலர் பங்கேற்றனர்.
