/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கி.புரம் யூனியனில் கிராமசபை கூட்டம்
/
கி.புரம் யூனியனில் கிராமசபை கூட்டம்
ADDED : ஜன 27, 2024 04:02 AM
கிருஷ்ணராயபுரம்: குடியரசு தினத்தையொட்டி, கிருஷ்ணராயபுரம் யூனியன் பஞ்.,களில், கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த திருக்காம்புலியூர் பஞ்., சார்பில் மேட்டுத்திருக்காம்புலியூர் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில், கிராம சபைக்கூட்டம் நடந்தது. திருக்காம்புலியூர் பஞ்., தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார். இதில், பஞ்சாயத்தில் உள்ள அடிப்படை பிரச்னைகள், சுற்றுபுறத்துாய்மை, குடிநீர் பிரச்னை, சாலை வசதி, நுாறு நாள் திட்ட பணியாளர்கள் கோரிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசப்பட்டது. துணைத்தலைவர் தங்கராஜ், மற்றும் வார்டு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* கள்ளப்பள்ளி பஞ்.,ல் கிராம சபைக்கூட்டம், அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது. பஞ்., தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். பஞ்சாயத்து சார்பில் நடந்து வரும் பணிகள் மற்றும் நுாறு நாள் திட்டம் குறித்தும் பேசப்பட்டது. வார்டு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

