/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சர்ச்சுகளை பழுது பார்க்க மானியத்தொகை வழங்கல்
/
சர்ச்சுகளை பழுது பார்க்க மானியத்தொகை வழங்கல்
ADDED : ஆக 03, 2025 01:09 AM
கரூர், கிறிஸ்தவ சர்ச்சுகளை பழுது பார்க்க மானியத்தொகை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் சொந்த கட்டடங்களில் இயங்கும், கிறிஸ்தவ சர்ச்சுகளை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளை மேற்கொள்ள, மானியத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் சர்ச் இயங்கியிருக்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் வாங்கியிருக்க கூடாது. அவ்வாறு ஒரு சர்ச்சுக்கு மானியத்தொகை வழங்கிய பின், 5 ஆண்டுகள் மானியத் தொகை வேண்டி விண்ணப்பிக்க தகுதியற்றது.
இத்திட்டத்தின் கீழ் தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிப்பறை அமைத்தல், குடிநீர் வசதி, சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக்செட் மற்றும் ஒலிப்பெருக்கி, நற்கருணை பேழை பீடம், திருப்பலிக்கு தேவையான கதிர் பாத்திரங்கள் உள்பட பல்வேறு பணிகளுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, 10 முதல் 15 ஆண்டு வரையிலான கட்டடங்களுக்கு, 10 லட்சம் ரூபாய், 15 முதல் 20 ஆண்டு வரையிலான கட்டடங்களுக்கு, 15 லட்சம் ரூபாய், 20 ஆண்டுகளுக்கு மேல் இருந்தால், 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.
இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.