/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிராவல் மண் கடத்தல் டிரைவர் தப்பியோட்டம்
/
கிராவல் மண் கடத்தல் டிரைவர் தப்பியோட்டம்
ADDED : ஆக 12, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, கிராவல் மண் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., பிரபாகர் உள்ளிட்ட போலீசார், குமாரபாளையம் அருகே, பள்ளிப்பாளையம் சாலை, சாணார்பாளையம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரி டிரைவர், போலீசார் நிற்பதை கண்டவுடன், லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். அதன்பின், போலீசார் லாரியை சோதனையிட்டபோது, சட்ட விரோதமாக கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. லாரியை கைப்பற்றிய போலீசார், தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.