/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாநகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வாழ்த்து
/
கரூர் மாநகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வாழ்த்து
கரூர் மாநகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வாழ்த்து
கரூர் மாநகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வாழ்த்து
ADDED : அக் 01, 2024 01:27 AM
கரூர் மாநகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில்
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வாழ்த்து
கரூர், அக்.1-
கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் சாதாரண மற்றும் அவசர கூட்டம் நேற்று நடந்தது. மேயர் கவிதா தலைமை வகித்தார். துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்றார். பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலாக செந்தில்பாலாஜி சிறையில் இருந்தார். உச்சநீதிமன்றம், அவருக்கு, ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
தொடர்ந்து, மின்துறை மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சராக செந்தில்பாலாஜி நேற்று முன்தினம் பதவியேற்றார். இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மண்டல தலைவர்கள் கனகராஜ், அன்பரசன், ராஜா உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து பேசினர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.
தொடர்ந்து கவுன்சிலர்கள் விவாதத்தில் பங்கேற்று பேசினர்.
ஸ்டீன்பாபு(காங்.,): பணிகள் முடிந்த பின், அந்த வார்டு கவுன்சிலர்களிடம் கையெழுத்தை ஒப்பந்ததாரர் பெற வேண்டும் என்ற நடைமுறை சரியாக பின்பற்றவில்லை. மேலும், போர்வெல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதில், போர்வெல் அமைக்கும் பணியில் எந்தந்த பணிக்கு எவ்வளவு தொகை என பிரித்து குறிப்பிடப்படுவது இல்லை.
மேயர் கவிதா: பணிகள் முடிந்த பின், அந்த வார்டு கவுன்சிலர்களிடம் கட்டாயம் கையெழுத்து பெற வேண்டும். இனி போர்வெல் பணிகள் மேற்கொள்ளும் போது, தனி, தனியாக பணிகளை, தொகை குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு பேசினர்.
கூட்டத்தில் சாதாரண கூட்டத்தில், 42 தீர்மானம், அவசர கூட்டத்தில், 18 தீர்மானம் என மொத்தம், 60 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.