/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இன்று 100 நாள் திட்டத்தில் பணிபுரியும் மா.திறனாளிகளுக்கு குறைதீர் கூட்டம்

ADDED : செப் 19, 2024 07:27 AM
கரூர்: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திற-னாளிகளுக்கு, இன்று குறைதீர் கூட்டம் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா-வது: கரூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு ஊராட்சி ஒன்றியங்களுக்குட்-பட்ட, 157 கிராம பஞ்சாயத்துகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக
வேலை உறுதி திட்டத்தின் கீழ், பணிபுரியும் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய சிறப்பு பணிகள்,
ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக குறைதீர் கூட்டம் இன்று நடத்தப்படுகிறது. அதன்படி, மாவட்ட அளவில் குறைதீர்
முகாம், கரூர் கலெக்டர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று (19ம் தேதி) பகல் 12:00 மணியளவில் நடக்கிறது.
மாற்றுத்திறனாளிகள்தங்களது குறை-களை மனுக்களாக அளிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்-ளது.